உள்நாடு

போலி மலேசியக் கடவுச்சீட்டுடன் நபரொருவர் கைது.

போலி மலேசியக் கடவுச்சீட்டுடன் ஆஸ்திரியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் இந்தியாவின் புதுடெல்லிக்கும், அங்கிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் சுமார் 90 இலட்சம் ரூபாவினை செலவிட்டு போலி கடவுச்சீட்டைத் தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

சுமார் 50,000 ஐ கடந்த கைதுகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்திற்கான வரியை அதிகரிக்க கோரிக்கை