உள்நாடு

போதுமான பெட்ரோல் கையிருப்பில் – எரிசக்தி அமைச்சு

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு எரிபொருள் ஏற்றிவரும் எந்தவொரு கப்பலும் நிராகரிக்கப்படவில்லை எனவும் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் ​கொள்கலன் மாதிரிகளும் முறையான சோதனை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமும் இது தொடர்பில் வினவியதாகவும் மாதிரி எதுவும் நிராகரிக்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கான விமான சேவைகள் ஆரம்பம்