சூடான செய்திகள் 1

பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர்.லத்தீப் இன்றுடன் ஓய்வு

(UTV|COLOMBO) இலங்கை பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபருமான எம்.ஆர்.லத்தீப் இன்றுடன்(05) ஓய்வுப் பெறுகிறார்.

41 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.

இவரது தலைமையின் கீழ் கடந்த 6 மாதங்களில் 798Kg ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அண்மையில் தெஹிவளை மற்றும் பேருவளைப் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை ​ஹெரோய்ன் கைப்பற்றல் விடயமும் லத்தீப்பின் தமைமையின் கீழேயே முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு