சூடான செய்திகள் 1

பொலிஸ் விசேட அறிவிப்பு

(UTVNEWS COLOMBO) பொரலஸ்கமுவ, பில்லேவ போ சமிந்து விகாரையின் பெரஹெர காரணமாக அதனை சுற்றியுள்ள வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு 08.00 மணி அளவில் பெரஹெர ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஹொரணை- கொழும்பு பிரதான வீதியின் ஊடாக செல்லும் பெரஹெர திலுலபிட்டிய சந்திக்கு சென்று மீண்டும் பிலியந்தலை வீதிக்கு பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்திற்கு அருகில் மீண்டும் திரும்பி பொரலஸ்கமுவ சந்திக்கு வந்து மீண்டும் விகாரையை நோக்கி செல்லவுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சாரதிகள் ஏற்படக்கூடிய சிரமத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

நாயை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காவல்துறை உத்தியோகத்தர் கொலை

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்…