சூடான செய்திகள் 1

பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO)-பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 65 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில், உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 48 பேர் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றிற்கு வழங்கிய ஒத்துழைப்பை கருத்திற்கொண்டு உதவிப் பொலிஸ் அதிகாரிகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அதிகாரிகளுக்கான நேர்காணலில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மேலும் 17 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (20) பதவியேற்பு…

மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும்

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது