உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV| கொழும்பு) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமையவும், கடமையின் அவசியம் கருதியும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நுகேகொடை பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரி ஆர்.எம்.பி.ரத்நாயக்க மேல் மாகாண புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கும் மேலதிகமாக 12 பிரதம பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 13 பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 2 பிரதம பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு

மனுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள் நியமனம்

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ வந்தடைந்தது