உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் இருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு)- கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் 02 பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மருதானை – டார்லி வீதியில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமின்றி வீதியில் பயணித்த நால்வருக்கு குறித்த இரண்டு பொலிஸாரும் தண்டனை வழங்கியுள்ளனர்.

தோப்புக்கரணம் போடுமாறு பொலிஸார் இருவரும் குறித்த நால்வருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

முதலீடுகள் , வர்த்தக அபிவிருத்திக்கு வியட்னாம் ஒத்துழைப்பு

மூன்று புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர் !

தாய்லாந்தில் அழகிப் போட்டி – 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் – மகுடம் சூடிய இலங்கை சிறுமி

editor