உள்நாடு

பொலிஸார் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார ஆரம்பத்தில் இருந்து வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, இதுவரையில் கிடைத்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விரைவாக வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கனிஷ்ட அதிகாரிகளுக்கு 17,000 ரூபாவாக காணப்பட்ட குறித்த மேலதிக கொடுப்பனவு, 11, 800 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அந்த தொகையின் 50 வீதத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பதில் நிதியமைச்சர் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் பயணத்தடை

ரிஷாட் மீது வழக்குத் தொடருங்கள் இல்லையென்றால் விடுவியுங்கள் – ரணில்

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்