சூடான செய்திகள் 1

பொலிஸார் இருவர் படுகொலை -முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர் கைது

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, கன்னன்துட பகுதியில் வைத்தே 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, சம்பவம் தொடர்பில் மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்

கொத்மலை நீர்தேக்க வான்கதவு திறப்பு