உள்நாடு

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சமிந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று

(UTV | கொழும்பு) – ரம்புக்கனையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கே. பி. சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியைகள் இன்று தெவலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த ஹிரிவடுன்னேவில் நடைபெறவுள்ளது.

இறுதிக்கிரியைகள் நிறைவடையும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினருக்கும் உதவுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, பொது பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12 (1) இன் படி, கேகாலை மாவட்டத்தையும் உள்ளடக்கிய பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளன.

இன்றுவரை தெவலேகம, ரொக்கன மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினரும் உதவவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

‘தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ – நாமல்

அரச புலனாய்வு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது