உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு சஜித்தின் ‘மூச்சுத் திட்டம்’

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி ஒரு செயலற்ற எதிர்க்கட்சியல்ல எனவும்,பிரயோக ரீதியாக செயற்பாட்டுத் திறன் கொண்ட எதிர்க்கட்சி எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,அத்தியாவசிய மருந்துகள் பலவற்றை இறக்குமதி செய்யும் முகமாக தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சுத் திட்டத்தின் மூலம் இந்த குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி அறிமுகம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், மனித உயிர்களை வாழ வைக்க முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இன்றைய(19) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ரிஷாத் பிணையில் விடுதலை

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள்