வகைப்படுத்தப்படாத

பொய்களை நம்ப வேண்டாம் என உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) –     அதிகாரத்தை இழந்த குழுவை மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர்த்தும் நோக்கத்துடன் சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். உண்மையை விட பொய்கள் வேகமாக பரவுகின்றன. எனவே பொய்களை நம்ப வேண்டாம் என உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியவுக்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தில் கன்பரா நகரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் புலம்பெயர் இலங்கை சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் மாணவர்கள் தொழில்துறை சார்ந்தோர் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொண்டார்கள்.

நாட்டு மக்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்த தெளிவான அபிவிருத்தி வேலைத்திட்டம் அமுலாகுகிறது. மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி மீண்டும் யுத்தமொன்று ஏற்படாத வகையிலான சமாதானத்தை கட்டியெழும்பு முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இத்தகைய பின்னணியில் சில கடும்போக்குவாதிகள் தாய்நாட்டுக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இத்தகைய நபர்களுக்கு எதிராக எதுவித தராதரத்தையும் பாராமல் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி கூறினார்.

தாய்நாட்டை நேசிக்கும் சகல இலங்கையர்களும் தமக்கு உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு தெரிவித்தார்.

தமது அரசாங்கத்தை ஆட்சிப்பீடத்தில் ஏற்றி மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை உச்ச பலாபலன்களை பெற திடசங்கற்பம் பூண்டுள்ளதாக குறிப்பிட்ட  ஜனாதிபதி, மக்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் விரும்பினார்கள். அவற்றை வலுவாக நிலைநாட்ட உறுதி பூண்டுள்ளதாகவும் கூறினார்.

Related posts

කටුනායක ගුවන්තොටුපොළේ පාලන හා සැපයුම් කළමනාකරු ජනපති කොමිසමට

அமைச்சரவையின் அறிக்கை

NICs to be issued through Nuwara Eliya office from today