வகைப்படுத்தப்படாத

பொதுமக்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் பாரிய தாக்குதல்!

(UDHAYAM, COLOMBO) – ஈராக்கின் மேற்கு மோசூலில் மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் இருந்து வெளியேறும் மக்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 64 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

ரிக்ரிஸ் ஆற்றை கடந்து பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி பொது மக்கள் செல்லும் வேளையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், மோசூலை மீள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கும் நோக்கல் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலில் ஏராளமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 6 லட்சம் மக்களுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் ரம்சான் பண்டிகைக்கு முன்னதாக முழு மோசூலையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என நம்புவதாக ஈராக்கிய தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய இளைஞர் கைது

17 இந்திய மீனவர்கள் கைது

MP Ashu calls for inquiry into Kalagedihena incident