உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுப் போக்குவரத்து பயன்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – நாளை(11) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாளை(11) முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களினதும் செயற்பாடுகளை நாளை முதல் பகுதியளவில் வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழு- இப்தார் நிகழ்வில் ரணில்

மயோன் சமூக சேவை அமைப்புக்கும், ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு

editor