அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் – ஒரே நாளில் 83 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1342 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 352 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 943 முறைப்பாடுகளும் 33 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 83 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 14 வன்முறைச் சம்பவங்கள்பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1,112 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 230 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியானது

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்

‘பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை, வருமானப் பிரச்சினை தான் முக்கிய காரணம்’