உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான கூட்டங்கள் 2ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி நள்ளிரவுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர், பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 4ம் திகதி வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் எந்தப் பிரசார நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் தேர்தல் தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 27 பேர் பலி

வவுனியாவில் பரபரப்பு: மாணவர்களை இலக்கு வைத்து குண்டு

சூட்சுமமான முறையில் ஜன்னல் கலட்டப்பட்டு தங்க நகைகள் திருட்டு -மாவடிப்பள்ளியில் சம்பவம்

editor