உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஜூலை மாதம் 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

பிரபாகரன் உயிரிழந்து விட்டார் : சாட்சியாக கருணா

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்