உலகம்

பொது மக்களிடம் மன்னிப்பு கோரும் ரஷ்ய ஜனாதிபதி!

(UTV | கொழும்பு) –

ரஷ்யாவில் இந்த ஆண்டு 8 சதவீதமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய பிறகு முட்டையின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பல்வேறு தடைகள் விதித்துள்ளதால் முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இறக்குமதி வரியை உயர்த்தியதும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி வரியை 1.2 பில்லியன் முட்டைகளுக்கான இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க இருப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் முதியவர் ஒருவர், முட்டை விலை மற்றும் கோழி இறைச்சி விலை அதிவேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

இதற்கு புடின், “நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசாங்க பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சூழ்நிலை சரியாகும் என நான் உறுதியளிக்கிறேன்” என்றுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !

இரட்டைக் குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்ட பெற்றோர்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!