அரசியல்உள்நாடு

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது – காரணம் வௌியானது

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு குருநாகலில் சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுவதற்காக நடைபெற்ற ‘இசுரு சவிய’ கொண்டாட்டத்திற்காக கூட்டுறவு நிதியிலிருந்து 183 மில்லியன் ரூபா செலவிட்டதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவர் மீது விசாரணை மேற்கொண்டது.

விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் அனுப்பிய பின்னர், சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார மாயாதுன்னே, இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

முறையற்ற கை சுத்திகரிப்பான்களுக்கு இன்று முதல் தடை [VIDEO]

சகலரும் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்