உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறையில்

(UTV | பதுளை) –  பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(10) சுகயீன விடுமுறையை பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கொவிட் தடுப்பிற்காக செயற்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை உரிய முறையில் செயற்படுத்த முடியாத காரணத்தால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அதன் தலைவர் ரஞ்சித் திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. இதன் நாளாந்த செயற்பாடுகளில் சரியாக பொது சுகாதார பரிசோகர்களுக்கான கடமைகள் என்னவென்பது தொடர்பிலான தௌிவுபடுத்தல் எமக்கு தேவை. இவர்கள் சில தீர்மானங்களுக்கு அமைவாக செயற்படுமாறு கூறினார்கள். எனினும் குறித்த தீர்மானங்களை செயற்படுத்த அவர்கள் தவறிவிட்டனர். இதனூடாக தொழிற்சங்க உரிமைகளை நாம் கோரவில்லை. பதுளை மக்களுக்கு ஆரோக்கியமான சேவையை மேற்கொள்வதற்கான தேவைதான் எமக்கு உள்ளது. இதன் காரணமாகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்தோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1001 பேர் கைது

பிளாஸ்டிக் – பொலித்தீன் பொருட்களுக்கு நாளை முதல் தடை

அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளியன்று விடுமுறையில்லை