உள்நாடு

பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 173 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

(UTV | கொழும்பு) – பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 173 சிறைக்கைதிகளுக்கு இன்று பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

அபராதம் செலுத்தத் தவறியதால் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் நிலுவைத் தொகைகள் அரச மன்னிப்பின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் என்று நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக 23 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.

Related posts

மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரையில் 832 பேருக்கு கொரோனா

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

editor

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை