உள்நாடு

பொகவந்தலாவ பகுதியில் காட்டு தீ 

(UTV|கொழும்பு) – பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள மானா தோப்பிற்கு இன்று (26) காலை இனந்தெரியாதவர்கலால் வைக்கப்பட்ட தீயினால் மூன்று ஏக்கர் காடு எறிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு இனந்தெரியாதவர்கலால் வைக்கப்பட்ட தீயினால் தேயிலை, மரங்கள் கருப்பன் தேயிலை மரங்கள்,  போன்றன எறிந்து நாசமாகியுள்ளதோடு, மாட்டுக்கு புல் அறுக்க வந்தவர்களே இவ்வாறு தீ வைத்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது

குறித்த தீயினை காட்டுபாட்டுற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு இதுவரை எவரும் கைது செய்யபடவில்லையென தெரிவிக்கபடுகிறது.

Related posts

அரிசி தட்டுப்பாடு – ஜனாதிபதி அநுர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – தைப்பொங்கலுக்கு அரிசி இல்லை – வர்த்தகர்கள் போராட்டம்

editor

ரஷ்யாவிடமிருந்து 50,000 Sputnik V வந்தடைந்தது

மேடை நாடகம், இசை நிகழ்ச்சிக்கான அரங்குகளை மீள திறக்க அனுமதி