வகைப்படுத்தப்படாத

பொகந்தலாவையில் மாணவியொருவர் விஷம் அருந்தி தற்கொலை

(UDHAYAM, COLOMBO) – நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவில்  பாடசாலை மாணவி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று 22.05.2016. திங்கள் கிழமை பிற்பகல் 02மணி அளவில் பதிவாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவி பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்ததாகவும், குறித்த மாணவி உயர்தரத்திற்கு தகுபெற்றிருந்ததாகவும் தெரியவருகிறது.

வீட்டில் எவரும் இல்லாத போதே குறித்த சிறுமி விஷம் அருந்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் அறிந்தவர்கள், விஷம் அருந்திய சிறுமியை பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

17 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக 23.05.2017 செவ்வாய்கிழமை நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சிறுமி விஷம் அருந்தியமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

தற்கொலை கடிதம் எழுத மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியையால் பரபரப்பு

நிலைபேறான அபிவிருத்திக்கு பொறிமுறை

பிரதமருக்கு புதுடில்லியில் வரவேற்பு