அரசியல்உள்நாடு

பைசர், மனோ, முத்து முஹம்மது, சுஜீவ எம்.பிக்களாக பதவிப்பிரமாணம்

அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய இன்று (17) கூடிய பாராளுமன்றத்தில் முதலில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியினால் பெயரிடப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க மற்றும் மொஹமட் இஸ்மாயில் முத்து முஹம்மது ஆகியோரும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினரான பைசர் முஸ்தபாவும் பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

Related posts

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

இம்முறை பாராளுமன்றம் செல்லும் 21 பெண்கள்

editor

சுமந்திரன் தலைமையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம்