உள்நாடு

பேரூந்துகளை கண்காணிக்க 50 குழுக்கள்

(UTV|கொழும்பு) – பேரூந்துகளில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக 50 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் செயல்படும் வகையில் இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 250 உறுப்பினர்களை உள்ளடக்கி இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பேரூந்துகளில் பாடல்களை இசைப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பம்பலபிட்டியில் தீ பரவல்

விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

உத்தியோகபூர்வ அரச வாகனங்களை கையளித்தார் சஜித்