சூடான செய்திகள் 1

பேரூந்து குடைசாய்ந்ததில் இருவர் பலி

(UTV|COLOMBO) நுவரெலியா – வலப்பனை மாவு தோட்டத்தில் நேற்றிரவு(24) பேரூந்து ஒன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனையிலிருந்து இராகலை நோக்கி பயணித்த குறித்த பேரூந்து, வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

தொழிநுட்ப கோளாறில் சிக்கிய ரயில்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து வரையறை தளர்வு

பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை ரத்து