வகைப்படுத்தப்படாத

பேருந்து தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பாக பேருந்தின் இரண்டு சாரதிகளையும் பொலிசார் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அனில் ஜெயசிங்க

දිස්ත්‍රික්ක හතකට නායයෑම් අනතුරු ඇඟවීම්

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்