உள்நாடுபுகைப்படங்கள்

பேரியல் அஷ்ரபுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் செயற்பாட்டாளருமான பேரியல் இஸ்மாயில் அஷ்ரப் அவர்கள் இலங்கை நாட்டிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் ஆற்றிய சேவையினை கெளரவிக்கும் முகமாக IMRA வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

நேற்று (03)மாலை IMRA விருதுகள் 2024, ஷங்கிரிலா வில் நடைபெற்ற போதே இவ்வாறு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இலங்கை முஸ்லிம் பெண் ஆளுமைகளையும் சாதனைகளையும் கெளரவிக்கும் பொருட்டு அகில இலங்கை முஸ்லிம் பெண்கள் அமைப்புடன் இணைந்து டெனாரா பயிற்சி நிறவனம் இணைந்து ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழாவிலேயே இவ்வாறு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

 

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

களனியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் தொடர்பில் இராணுவ தளபதி கருத்து