கிசு கிசுசூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்வார் என நம்புகிறேன் – ஜனாதிபதி

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த தனது பதவியை இன்றைய தினம் இராஜினாமா செய்வார் என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் ஊடக ஆசியர்களுடனான சந்திப்பிப்னபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தமது கடமைகளை உரியவாறு மேற்கொள்ளாதமையினால் இன்றைய தினம் பொலிஸ் மா அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என நான் நம்புகிறேன் எனவும் இதன்போது அவர்  மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ நேற்றைய தினம் தனது பதிவியை இராஜினாமா செய்த நிலையில் அப் பதவிக்கான புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

 

 

 

Related posts

Gmail மற்றும் Google drive ல் சிக்கல்…

எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்