வகைப்படுத்தப்படாத

பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

(UTV|BELGIUM)-பெல்ஜியம் நாட்டின் பிரதமர் சார்ள்ஸ் மிச்சேல் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளுடன் ஏதிலிகள் உடன்படிக்கை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
2014ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற அவர் அந்தநாட்டின் மிகவும் குறைந்த வயதில் பிரதமர் பதவியை ஏற்றவராவார்.
ஐக்கிய நாடுகளுடனான ஏதிலிகள் உடன்படிக்கைக்கு எதிராக ப்ரசல்ஸில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதற்கு மத்தியிலேயே அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
எனினும் அந்த நாட்டின் மன்னர் குறித்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக இன்னும் அறிவிக்கவில்லை.

Related posts

India set to re-attempt moon mission

දිවයිනේ ප්‍රදේශ කිහිපයකට වැසි රහිත කාලගුණයක්

பலத்த காற்றுடன் கூடிய மழை