உள்நாடு

பெரும்பாலும் மின் வெட்டு இன்று இருக்காது [UPDATE]

(UTV | கொழும்பு) – செயலிழந்திருந்த நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று (22) மாலைக்குள் மின் விநியோக பாதைக்கு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு வழமைக்கு திரும்புமாயின், இன்று (23) மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தனதெரிவித்திருந்தார்.

இன்றும் மின்வெட்டு ஏற்படுமாயின் அது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகள் நேற்றிரவு சுமார் 45 நிமிடங்கள் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

மக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறையாகும்

பேராயர் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றில் மனு தாக்குதல்!