சூடான செய்திகள் 1

பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

(UTV|COLOMBO) மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றும் நாளையும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

Related posts

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு

பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!