சூடான செய்திகள் 1

UPDATE- பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

பாராளுமன்றம் இன்று (24) காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவினால் இந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, 31 அமைச்சு ஆலோசனை தெரிவுக்குழுக்களான அனுமதியை கோரும் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி, சுற்றுலா, நிதி மற்றும் வெகுஜன ஊடகம், வௌிவிவகாரம், சுதேச மருத்துவம் உள்ளிட்ட 31 அமைச்சுக்களுக்கான ஆலோசனை தெரிவுக் குழுக்களுக்கான அனுமதி பெறப்படவுள்ளது.

இந்த செயற்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பரிந்துரையும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கூட்டு எதிரணியின் முக்கிய தீர்மானம் இன்று

நாட்டில் உள்ள மக்களுக்கான ஓர் அவசர செய்தி…

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது