உள்நாடுபிராந்தியம்

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அதிகாரிகள் சகிதம் அங்கு விஜயம் செய்து, மண்டபத்தை திறப்பு விழா செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

இதன்போது கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம். சுகுமார் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் இரு மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியாக அமைக்கப்பட்டுள்ள இக்கலாசார மண்டபத்தில் மாநாடுகள், கூட்டங்கள், கலை, கலாசார விழாக்கள் மற்றும் பொது மக்களின் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கும் ஏற்றவாறு குறைந்த சேவைக் கட்டணத்தில் பண்டப அனுமதியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலாசார மண்டபத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

-பாறுக் ஷிஹான்

Related posts

மனித நேயத்துக்காக பாடுபடுவோருக்கு பாராட்டு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு – இருவர் காயம்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 32 பேர்கைது