உள்நாடு

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்

(UTV | கொழும்பு) – தொலைதூரப் பகுதிகள் 24 இல் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ள மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி சுமார் 72 சொகுசு மற்றும் அதி சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எட்டு மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்து செய்யப்பட்ட கொழும்பு – கோட்டை – பொலன்னறுவை – புலத்திசி நகரங்களுக்கு இடையிலான தொடருந்துகள் நேற்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு விளக்கமறியல்

ரிஷாத் பாராளுமன்றம் வருவதில் சட்டரீதியான தடைகள் இல்லை

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்