உள்நாடு

பெப்ரவரி 15 ஆம் திகதி வரை மின்சார கட்டண திருத்தம் அமுலில் இருக்கும்

(UTV | கொழும்பு) –  இம்ம்மதம் முதலாம் திகதி அமைச்சரவை அனுமதியளித்த மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டண திருத்ததிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் அந்த புதிய மின் கட்டண திருத்தம் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் அமுலாகும் தெரிவித்துள்ளது

இதன்படி, புதிய மின் கட்டண திருத்தத்தின் கீழ்,
0 முதல் 30 வரையான வீட்டு மின் அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும்,
30 முதல் 60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 550 ரூபாவாகவும் உயரும்.

புதிய மின் கட்டண திருத்த முன்மொழிவின்படி,
60 முதல் 90 வரையாக அலகுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 650 ரூபாவாகவும்,
90 முதல் 180 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1500 ரூபாவாகவும் உயரும்.

180 மின்சார அலகுகளுக்கு மேல் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிலையான கட்டணமாக 2000 ரூபா அறவிடப்படும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைத்தொழில்களுக்கான மின் கட்டண அதிகரிப்புக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுதந்திர தின நல்வாழ்த்து தெரிவித்த – ஜீவன் தொண்டமான்!

ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை

‘பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை, வருமானப் பிரச்சினை தான் முக்கிய காரணம்’