சூடான செய்திகள் 1

பெசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-முறையற்ற நிதிப்பயன்பாடு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல்நீதிமன்ற நீதியரசர் ஆர்.குணசிங்க இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் பிரதிமன்றாடியார் நாயகம் துசித் முதலிகே, நீதாய மேல்நீதிமன்றத்தில் வழக்கொன்றை கொண்டு நடத்துவதாக சட்டத்தரணி பிரியான் அபேகுணவர்தன நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான 2ஆயிரத்து 991 மில்லியன் ரூபா நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தி தகரங்களை பெற்றுக்கொடுத்துள்ளதாக பெசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல்