விளையாட்டு

பெங்களூர் அணியுடனான தோல்வியும் ரோஹித் சர்மாவின் நியாயங்களும்

(UTV |  இந்தியா) – 2021 ஆண்டுக்கான ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 2 விக்கெட்டுகளினால் வீழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பெங்களூர் அணியுடனான இந்த தோல்வி குறித்து மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா பேசுகையில்,

“முதல் போட்டியில் வெற்றி பெறுவதை விட தொடரை வெல்வதே அதிக முக்கியம் என நான் கருதுகிறேன். இது மிக சிறந்த போட்டி, இறுதி வரை போராடினோம். முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். முதல் போட்டியில் நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டு அதை அடுத்தடுத்த போட்டிகளில் சரி செய்து கொள்வது வழக்கம் தான். ஜென்சன் திறமையான வீரர், அவரால் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் மிக சிறப்பாக பந்துவீச முடியும் என்பதை நாங்கள் அறிவோம். டிவில்லியர்ஸ் – கிரிஸ்டியன் இடையேயான பார்ட்னர்சிப்பை பிரிக்கவே டிரண்ட் பவுல்டையும், பும்ராஹ்வையும் கொண்டு வந்தோம், ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. டிவில்லியர்ஸ் மிக சிறந்த வீரர். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.

Related posts

2019-ம் ஆண்டுடன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார், லீமான்

சர்வதேச தரப்படுத்தலில், இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு 19வது இடம்

முத்தையா முரளிதரன் வெளியிட்ட அதிரடி கருத்து