கேளிக்கை

‘பூமி’ வைரலாகிறது [VIDEO]

(UTV | இந்தியா) – ஜெயம் ரவியின் படங்கள் வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டு வருவதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் ஒரு காரணம் என்று சொல்லப்படுவதுண்டு.

இந்நிலையில் அவர் தற்போது நடித்துள்ள படம் பூமி. இப்படத்தை இயக்குநர் லட்சுமணன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் ஒரு பாட்டிற்கு அனிருத்தை பாட வைத்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாளை ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு பூமி படத்தில் அனிருத் பாடிய முதல் பாடல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளது படக்குழு. அறிவித்த நிலையில் தற்போது இப்பாடம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்பாடலை எழுதியுள்ளார். அவரது டுவிட்டர் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனால் ஜெயம் ரவியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலையில், இசையமைப்பாளர் டி இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயம் ரவிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Related posts

கொலை வழக்கில் சிக்கினாரா பாவனா? விசாரணையில் திடுக் தகவல்கள்!

அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை-நம்முடைய கண்ணுக்கு நாம அழகா தெரிஞ்சா போதும்

reema lagoo உயிரிழந்தார் – [VIDEO]