உள்நாடு

பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிட கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசேட மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

அதற்கமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த குறித்த வழக்கைக் கைவிடுமாறு பதில் நீதவான் சஞ்சய கமகே உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ருபெல்லா – அம்மை நோயை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை

இரட்டைக்குடியுரிமை பெற 5,401 பேர் விண்ணப்பித்துள்ளனர்

ரிஷாத் பதியுதீன் மனுவில் இருந்து நான்காவது நீதியரசரும் விலகல்