உள்நாடுசூடான செய்திகள் 1

“புத்தாண்டுக்கு பின் அரசியல் மாற்றம்” சஜித் அணிக்குள் பிளவு

(UTV | கொழும்பு) –

புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அடுத்த 20 முதல் 30 ஆம் திகதிற்குள் அமைச்சர்கள் இடமாற்றங்கள் மற்றும் கட்சி தாவல் இடம்பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டுக்கு பின்னரான அடுத்த இரண்டு வாரங்கள் இந்த நாட்டின் அரசியலுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் அரசுடன் இணைந்து ஆட்சியமைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உறுதிப்படுத்திருந்தார். இதனால் சஜித் கட்சிக்குள் அதிகம் பிளவு காணப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. (ச)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலுக்கு பிரித்தானியாவில் அமைச்சரவை அமைச்சர் பதவி

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

editor