சூடான செய்திகள் 1

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மேலதிக பஸ் சேவைகள்

(UTV|COLOMBO)-புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் நலன்கருதி, மேலதிகமாக ,ரண்டாயிரம் பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தப் போவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

 

நேற்று  நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் இதுதொடர்பாக சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவிக்கையில் கொழும்பு, மத்திய பஸ் நிலையத்திலிருந்து நாளை முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை 24 மணிநேரமும் பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன. எதிர்வரும் 16ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை பிற மாவட்டங்களில் இருந்து கொழும்பு நோக்கி மேலதிக பஸ் சேவைகள் நடத்தப்படும். இந்தக் காலப்பகுதியில் போக்குவரத்துச் சபையின் சாரதிகள், நடத்துனர்கள் அடங்கலாக சகல பணியாளர்களதும் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் பயணிகளின் நலன்கருதி தனியார் பஸ் உரிமையாளர்களும் மேலதிக பஸ் சேவைகளை நடத்த உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை தொடக்கம் எதிர்வரும் 21ம் திகதி வரை மேலதிக சேவைகள் நடத்தப்படும். கொழும்பு பஸ்ரியன் மாவத்தை பஸ் நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் பஸ் சேவைகளின் எண்ணிக்கை21 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமச்சந்திர தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பான குழு இன்று கூடுகிறது

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?