உள்நாடு

புத்தாண்டு நிறைவடையும் வரையில் விசேட சோதனை

(UTV | கொழும்பு) – புத்தாண்டு நிறைவடையும் வரையில், வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சாரதிகள், கவனயீனமற்ற முறையிலும், அதிக வேகத்துடனும், மதுபோதையிலும் வாகனங்களை செலுத்துகின்றமை தொடர்பில் கண்காணிக்கப்படுகிறது.

மதுபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தியவாறு, வாகனத்தை செலுத்திய நிலையில் கைதுசெய்யப்படும் சாரதிக்கு, பொலிஸ் பிணை வழங்கப்பட மாட்டாது.

அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், குறித்த வாகனமும் பொலிசாரினால் பொறுப்பேற்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் இருந்த நபருக்கு, வாகனத்தை செலுத்த வழங்கியமை தொடர்பில், குறித்த வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுமாறு, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

சுனில் ஜயவர்தனவின் கொலை : சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு