உள்நாடு

புத்தாண்டின் சுப நேரங்கள்

(UTV | கொழும்பு) –  தமிழர்களின் பண்பாட்டில் தனித்துவ இடத்தினை வகிக்கும் மிக உன்னதமான திருநாளான பிலவ சித்திரை புத்தாண்டு இன்று பின்னிரவு மலர இருக்கிறது.

மகிழ்ச்சி, துக்கம், சாதனை, சோதனை, வேதனை, கோபம், போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம், இழப்பு என எண்ணற்ற உணர்வுகளாலும், நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது.

திரும்பிப்பார்த்தால் நினைத்துப் பார்க்க ஆயிரக்கணக்கான நினைவலைகள். அந்தவகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று 13.04.2021 செவ்வாய்க்கிழமை பின்னிரவு 1மணி 39 நிமிடத்திலும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பின்னிரவு 2மணி 31நிமிடத்திலும் #பிலவ என்னும் புதுவருடம் பிறக்க இருக்கிறது.

60 ஆண்டுகளைக் கொண்ட பஞ்சாங்கம் சித்திரை மாதம் 1 ஆம் நாளை கொண்டுதான் கணிக்கப்படுகிறது. அதில் உள்ள வருடங்களில் #சார்வரி என்ற வருடம் முடிந்து புதிய எதிர்பார்ப்புகளை கொண்டு மங்களகரமான திருநாளான சித்திரைப் புதுவருடம் #பிலவ பிறக்கிறது.

Related posts

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி

“முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர்”