அரசியல்உள்நாடு

புத்தளத்துக்கு இரண்டு MP க்கள் – எழுச்சி மாநாட்டில் ரிஷாட் MP.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் 65000 வாக்குகளை பெற்று புத்தளம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெரும் என ரிஷாட் பதியுதீன் புத்தள எழுச்சி மாநாட்டில் திட்டவட்டம்.

நேற்று (27) சனிக்கிழமை புத்தளம் பிரதானவீதியில் இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட எழுச்சி மாநாட்டில் பேசும் போது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவாவி தலைமையில் இடம் பெற்ற மாநாட்டில் கட்சியின் தவிசாளர் எம். எஸ். எஸ். அமீர் அலி,தேசிய அமைப்பாளர் எம். மஹ்ரூப், சட்டத்தரணி அன்சில், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் என். டீ. எம். தாஹிர்,உயர் பீட உறுப்பினர் யகியா ஆப்தீன், புத்தளம் நகர அமைப்பாளர் ஏ. ஓ. அலி க்கான்,கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பைசல் மரிக்கார்,சட்டதரணி முகம்மத், புத்தளம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நசீர் உட்பட பலரும் உரையாற்றினர்.

மேலும் அவர் அங்கு பேசுகையில்

பிரிந்து நின்றும் பிரதேச வாதம் பேசியும் பிளவுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சித்தவர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம்.

இவ்வாரான சிறுபிள்ளை தனமான செயற்பாடுகளை கைவிட்டுவிட்டு எம்முடன் இணையுங்கள் இதன் மூலம் புத்தளம் மக்கள் நன்மை அடைவார்கள். உங்களை அரவணைக்க நாம் தாயாராக இருக்கின்றோம்.

ஆனால் இந்த நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இழுக்கை ஏற்படுத்திய புத்தளம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு எந்த மன்னிப்பும் இல்லை.கட்சிக்குள்ளும் இடமுமுமில்லை,

இலங்கை சரித்திரத்தில் விசேட அதிதிகளுக்கான விமான நிலைய நுழைவா யிலை பயன்படுத்த முடியாது என்று பாராளுமன்றம் தடை விதித்த நபர் தான் இவர்.

இந்த புத்தளத்தில் அனுர குமார, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் கூட்டங்களை வைக்கலாம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மட்டும் கூட்டங்களை வைக்க முடியாது என்று சில்லறைகளை ஏவி ஆட்சிச்சுருத்தும் பணியினை இந்த உறுப்பினர் செய்து வந்துள்ளார்.

இது தொடர்பில் புத்தளம் மாவட்ட அரசியல் குழுவின் அதிரடி தீர்மானம் தான் பிரமாண்டாமான இந்த மாநாடு என்பது சான்றாக உள்ளது.

இவ்வாறு பிரதேச வாதம் மற்றும் வடபுல முஸ்லிம்களினை அகதி என்று தொடர்ந்து பேசும் ஓ ரவஞ்சனை மனநிலையின் பின்புறம் இங்கு மக்களுக்கிடையில் முறு களை தோற்றுவிப்பதே ஆகும்.

இங்கிருக்கின்ற மதிப்புக்குரிய உலமாக்களுக்கு பாரிய பொறுப்பு இருப்பதாக கருத்துகின்றேன். இவ்வாரான விசக்கருத்துக்களை விதைப்பற்கு எதிராக சமூகத்தை பாதுக்க நடவடிக்கை எடுப்பதாகும். இப்படிப்பட்டவர்கள் எமது அணியில் இருந்தாலும் அதனை அங்கீகரிக்க முடியாது. இதற்கு இஸ்லாமும் ஒருபோதும் இடம் கொடுக்கவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

வடபுல முஸ்லிம்களின் வருகை புத்தளம் மக்களுக்கு பெரும் சுமையாக தான் இருந்திருக்கும். அதனை ஒருபோதும் மறுக்க முடியாது.

ஆனால் மனித நேயத்தின் உச்சம் இந்த மக்கள் மண் முதல் பொண் வரை கொடுத்து எம்மை அன்புடன் அரவணைத்தார்கள். இன்று எமது மக்கள் இங்கும் வாக்காளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனது சகோதரன் ரியாஜ் அவர்களும் புத்தளத்தில் திருமணம் முடித்தவர். இது போன்று இன்னும் எத்தனையோ பேர்கள் உள்ளனர். பலர் மீண்டும் சொந்தமண்ணில் மீள் குடியேறியுள்ளனர்.

புத்தளம் அரசியலில் வர வேண்டிய முஸ்லீம் பிரதி நிதித்துவம் இழக்கப்பட்டே வந்திருக்கின்றது. இதற்கு காரணம் எம்மில் அரசியல் கட்சி ரீதியான பிளவுகள்.

மர்ஹூம் ஹாபி, பாயிஸ், நவவி என்று பிரிந்து செய ற்பட்டனர்.இதற்க்குள் நாங்களும் அரசியல் செய்து வாக்குகளை சிதரடிக்க செய்ய வேண்டுமா, ஆகையால் தான் 2001 ஆம் ஆண்டு முதல் 2015 வரை அமைதியாக இருந்தோம். தொடர்ந்தும் இம்மக்களின் பிரதி நிதித்துவம் இழக் க ப்படக் கூடாது என்பதினால் 2015 முதல் acmc தமது பங்களிப்பை வழங்க ஆரம்பித்தது.

இதனது பிரதி பலன் எம். எச். எம். நவவி அவர்களுக்கு தேசிய பட்டியல், அடுத்த தேர்தலில் விமர்சனதுக்கு உள்ளயுள்ளாகியுள்ள பிரதிநிதி, 38 வருடங்களின் பின்னர் புத்தளம் மக்களுக்கான அடைவுகள் இல்லையா? என கேட்க்க விரும்புகின்றேன்.

தற்ப்போதைய அரசியல் சூழலானது மிகவும் தீர்க்க மானது, இந்த வேலையில் எமது எழுச்சி மாநாடு பலருக்கு புதிய செய்திகளை சொல்லுகின்றது.

மைத்திரிப்பால சிரிசேனவுக்கு நாம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கும் போது எழுத்து மூலமான கோரிக்கையுடன் உடன்பாடு செய்தோம்.

இன்றும் எம்மை பல கட்சிகள் அழைக்கின்றன. ஆனால் நாங்கள் வெறுமனே வாய் வார்த்தைகளுக்கு சோரம் போய் சமூகத்தை விற்றுவிடப் போவதில்லை என்று கூறிய கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் யாருக்கு எமது ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்க்கு மக்களின் பதிலும் வந்தது.

பொறுமை கொள்ளுங்கள் உங்களது கருத்துக்கள் உள்வாங்கப்படும் என்ற பதிலுடன் தனது உரையினை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்வில் அண்மையில் கட்சியுடன் இணைந்து கொண்ட முன்னாள் பிரதேச செயலாளர் எம். சலீம், மற்றும் ரிஸ்வி முஸ்தபா (mayon) ஆகியோருக்கு புத்தளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டது.

இதே போல் கல்முனையினை சேர்ந்து முன்னாள் சுங்க உதவி பணிப்பாளர் முகம்மது ரிபாய் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் தலைவர் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம். ஆசிக், எம். பாவ்ஸான், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர்கள் ரஸ்மி, அஸ்கின், வணத்தாவில்லு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அனஸ்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

”இது படுமோசமான ஆட்சி” நோர்வே தூதுவரிடம் சஜித்

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் பிடியில்..

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடும் அரசாங்கம் இருப்பதில் அர்த்தமில்லை – சஜித் பிரேமதாச