உள்நாடு

புதுவருட கொவிட் கொத்தணியில் 2,142 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 2,142 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 215,538 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182,238 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்து ரிஷாட் கண்டனம்!

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!