உலகம்

புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவிலும்

(UTV | நைஜீரியா) –  தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தனது மரபணுவை மாற்றிக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை உள்ள நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்த மற்றொரு கொரோனா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்க விலை

editor

இம்ரான் கானின் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்