உள்நாடு

புதிய பணவியல் விதிகள் நிறைவேற்றப்படும் – பிரதமர்

(UTV | கொழும்பு) – புதிய பணவியல் விதிகள் நிறைவேற்றப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

பண அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அந்த அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கு, தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்துவதுடன், தற்போதுள்ள நாணயச் சட்டங்களைக் கருத்தில் கொண்டு புதிய நாணயச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு வலுவான மற்றும் அதிக சக்தி வாய்ந்த நாணயச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு

முனவ்வராவின் ஜனாஸா வீட்டாரிடம் ஒப்படைப்பு!

அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதி