கிசு கிசு

புதிய கட்சி : புதிய சின்னம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனியானதொரு முன்னணியில் போட்டியிட, தன்னுடைய கட்சியுடன் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச போன்ற ஒரு சிறந்த அரசியல்வாதி தம்முடைய கட்சியில் இணைந்து போட்டியிடுவது ஒரு பாக்கியம் எனவும், இந்நாட்களில் அரசியல் கட்சிகள் இடையே ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒரே அரசியல் கட்சியாக தமது கட்சியை கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடம்பெறும் குறித்த கலந்துரையாடல் வெற்றியாக முடிந்தால் எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாச கங்காரு சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

15 லட்சம் வீடியோக்களை நீக்கியது facebook…

450 கிராம் பாண் ஒன்றின் விலை 350 ரூபா?

உலகில் மிக அழகான பெண் இவரா?