சூடான செய்திகள் 1

புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

(UTVNEWS | COLOMBO) – தெஹிவளை – கல்கிஸ்ஸ மற்றும் பன்வில ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்காக புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் தெரிவுக் குழு அதிகாரிகளின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதி எஸ்.டபிள்யூ.என் தனுஷ்கவிற்கு பதிலாக அக்கட்சியின் கே.பிரேமசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பன்வில பிரதேச சபை உறுப்பினராக இருந்த ஜனநாயக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய சுப்பையா உமா சரஸ்வதியின் உறுப்புரிமை அக்கட்சியால் ரத்துச் செய்யப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமாகியிருந்த பதவிக்கு அக்கட்சியின் சூசை விஜயமாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் இன்று